தொண்டி : இளைஞர் பேரவை சார்பில் தொண்டி சிவன் கோயிலில் உலக நன்மைக்காக 508 விளக்கு பூஜை நடந்தது. இதில் ஏராளமான பெண்கள் பங்கேற்று வழிபாடு செய்தனர். அதேபோல், திரு வாடானை ஆதிரெத்தி னேஸ்வரர் கோயிலில் நேற்று பிரதோஷ விழா நடந்தது. இதையொட்டி, நந்திபகவான் வெள்ளி கவசத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். ஆதிரெத்தினேஸ்வரர், சிநேகவல்லிதாயாருக்கு சிறப்பு அபிஷேகங்கள் நடந்தது.