பதிவு செய்த நாள்
20
ஜன
2015
11:01
நெட்டப்பாக்கம்: கலிஞ்சிக்குப்பம், தென்பெண்ணையாற்றில் ஆற்றுத் திருவிழா நேற்று நடந்தது. கரையாம்புத்துார் அடுத்துள்ள கலிஞ்சிக்குப்பம் தென்பெண்ணையாற்றில், பொங்கல் பண்டிகையின் 5ம் நாளான நேற்று நதி தீர்த்தவாரி நிகழ்ச்சி நடந்தது. மடுகரை, நெட்டப்பாக்கம், செம்படபேட்டை, பனையடிக்குப்பம், கரையாம்புத்துார் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து, சுவாமிகள் ஆற்றில் எழுந்தருளின. விழாவில் நெட்டப்பாக்கம் மற்றும் சுற்றியுள்ள கிராம பகுதிகளை சேர்ந்த ஆயிரக்கணக்கான மக்கள் கலந்து கொண்டு, சுவாமி தரிசனம் செய்தனர். புதுச்சேரி மற்றும் தமிழக போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். இதேபோல், சோரியாங்குப்பம் தென்பெண்ணையாற்றில் நடந்த ஆற் றுத் திருவிழாவில் பாகூர், குருவிநத்தம், சார்காசிமேடு, இருளஞ்சந்தை கிராமங்களில் இருந்தும் சுவாமிகள் தீர்த்தவாரிக்கு எழுந்தருளின.