புதுச்சேரி:டி.வி. நகர் புனித செபஸ்தியார் ஆலய ஆடம்பர தேர் பவனி நடந்தது. புதுச்சேரி திருவள்ளுவர் நகர் புனித செபஸ் தியார் ஆலய ஆண்டுபெருவிழா கடந்த 17ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது.விழாவை யொட்டி, ஒவ்வொரு நாளும் பாத்திமா மேல்நிலைப் பள்ளி முதல்வர் ஜான் போஸ்கோ, பெத்திசெமினார் மேல்நிலைப்பள்ளி துணை முதல்வர் தோமினிக் சாவியோ, ஜென்மராக்கினி மாதா ஆலய உதவி பங்குத் தந்தை லுார்து ஜெயராஜ் ஆகியோர் தலைமையில் திருப்பலி நடந்தது. நேற்று காலை, புதுச்சேரி–கடலுார் உயர்மறை மாவட்ட முதன்மை குரு அருளானந்தம் தலைமையில் திருவிழா திருப்பலி நடந்தது. மாலை 6.45 மணிக்கு ஆடம்பர தேர்பவனி, நற்கருணை ஆசீர் நடந்தது.