கீழக்கரை : திருப்புல்லாணி அருகே உள்ள சேதுக்கரை கடற்கரையில் தை அமாவாசை தினத்தை முன்னிட்டு பக்தர்கள் திரண்டு வந்து, முன்னோர்களுக்கு திதி மற்றும் பரிகார பூஜைகளை அதிகாலை 4.30 முதல் மாலை 5 மணி வரை நடத்தி வழிபட்டனர். கடற்கரை முன் உள்ள சேதுபந்தன ஜெயவீர ஆஞ்சனேயர் கோயிலில் 12 வகையான தீபாராதனைகளுடன் விஸ்வரூப தரிசனம் நடந்தது. பக்தர்களால் ராமநாம ஜெபம், அனுமன் சாலீசா உள்ளிட்ட கீர்த்தனைகள் பாடப்பட்டன. ரெகுநாதபட்டர் தலைமையில் ஜெகந்நாதன், ஜெகத்ரட்சகன், ராமகிருஷ்ணன், ஸ்ரீராம், நாராயணப்பட்டர் உள்ளிட்டோர் பூஜைகளை செய்தனர்.ஏற்பாடுகளை ராமநாதபுரம் சமஸ்தான தேவஸ்தான நிர்வாகத்தினர் செய்திருந்தனர்.
தொண்டி: தொண்டி அருகே தீர்த்தாண்டதானத்தில் உள்ள சகல தீர்த்தமுடையவர் கோயிலில் தை அமாவாசையை முன்னிட்டு கடலில் ஏராளமானோர் புனித நீராடினர். பின்பு சுவாமிக்கு நடந்த சிறப்பு அபிஷேக, ஆராதனையில் கலந்து கொண்டனர்.