பதிவு செய்த நாள்
21
ஜன
2015
12:01
மணவாள நகர்: மணவாள நகர் அடுத்த, ஒண்டிக்குப்பம் கங்கைநாத சுவாமி கோவிலில், வரும் 25ம் தேதி திருக்கல்யாணம் நடைபெற உள்ளது. மணவாள நகர் அடுத்த, ஒண்டிக்குப்பம் பகுதியில் அமைந்துள்ளது, நீர்நிலை நாயகி பெண்ணில் நல்லாள் உடனுறை கங்கைநாத சுவாமி கோவில். இங்கு, ஜன., 25ம் தேதி, சிவபெருமானுக்கும், பார்வதி அம்மையாருக்கும் திருக்கல்யாணம் நடைபெறவுள்ளது. முன்னதாக, நாளை மாலை 5:00 மணிக்கு, பந்தக்கால் நிகழ்ச்சியும், கொடியேற்றமும் நடைபெறுகிறது. பின்னர், 23, 24ம் தேதிகளில், நலுங்கு நிகழ்ச்சியும், சிறப்பு ஆராதனையும் நடைபெறும். 25ம் தேதி, மாலை 3:00 மணிக்கு, ஒண்டிக்குப்பம் விநாயகர் கோவிலிலிருந்து, மணமகள் வரவேற்பு நிகழ்ச்சியும். மாலை 4:00 மணி முதல் இரவு 7:00 மணி வரை, சிவபெருமானுக்கும், பார்வதி அம்மையாருக்கும் திருக்கல்யாண நிகழ்ச்சி நடைபெறும். தொடர்ந்து இரவு 8:00 மணிக்கு சுவாமி வீதிஉலா நடைபெறும்.