விழுப்புரம்: விழுப்புரம் சாலாமேடு அஷ்டவராகி கோவிலில் வரும் 24ம் தேதி திருக்கல்யாண உற்சவம் நடக்கிறது. விழுப்புரம், சாலாமேடு அஷ்டவராகி கோவிலில் வரும் 24ம் தேதி வசந்த பஞ்சமி உற்சவ விழா நடக்கிறது. இதையொட்டி நேற்று மாலை பத்ரகாளியம்மன் யாகம் நடந்தது. இன்று காலை கணபதி பூஜை, அய்யனார் பூஜை மற்றும் கொடியேற்ற நிகழ்ச்சி நடக்கிறது. நாளை காலை சப்த கன்னி பூஜை, கோ பூஜையும், மறுநாள் 23ம் தேதி காலை 63 சக்திகள் வீதியுலா நிகழ்ச்சி நடக்கிறது. தொடர்ந்து 24ம் தேதி காலை சுமங்கலி பூஜை, ஸ்ரீசூக்த பூஜை நடக்கிறது. மாலை 7:00 மணிக்கு வராகி - பைரவர் திருக்கல்யாண உற்சவம் நடக்கிறது. வரும் 25ம் தேதி காலை வராகி பைரவர் வீதியுலா, மாலை 5:00 மணிக்கு 63 சக்திகள் விடையாற்றி விழா மற்றும் கும்பம் கொட்டுதல் நிகழ்ச்சி நடக்கிறது. விழா ஏற்பாடுகளை வராகி வாக்கு பீட நிர்வாகி சாக்த மகேஷ்ராம் தலைமையிலான குழுவினர் செய்து வருகின்றனர்.