திருச்சிக்கு அருகில் உள்ள திருச்செந்துறை சந்திரசேகர சுவாமி கோயிலில் அம்பிகையின் திருநாமம், மானேந்திய வல்லி. இந்த அம்மன் ஈசனைப் போலவே மானும் மழுவும் ஏந்தி ஈஸ்வரியாகக் காட்சியளிக்கிறாள். இந்த வித்தியாசமான திருக்கோலத்தை ஈசனொரு பாகி என்று வியந்து போற்றுகின்றனர்.