சென்னை- கேளம்பாக்கம் ரத்ன மங்கலம் அரைக்காசு அம்மன் கோயிலில் கருவறையை வலம் வரும்போது கோஷ்டத்தில் ஹயக்ரீவ சரஸ்வதியை தரிசிக்கலாம். சரஸ்வதி தேவியை தன் மடியில் அமர வைத்து வேதங்களை தானே குருவாக இருந்து தேவிக்கு உபதேசித்தாராம் ஹயக்ரீவர். இதுபோன்ற திருக்கோலத்தை வேறெங்கும் காண இயலாது.