பதிவு செய்த நாள்
22
ஜன
2015
12:01
அரியலூர்: அரியலூர் காளியம்மன் கோவிலில், உலக நன்மையை வேண்டி, இரண்டு நாள் மகா நவசண்டி யாகம் நடக்கிறது. உலக மக்களின் நன்மை வேண்டி, அரியலூர் விளாங்கார தெருவில் உள்ள காளியம்மன் கோவிலில், வரும், 24ம் தேதி அதிகாலை, 5 மணிக்கு விக்னேஸ்வர பூஜை, கணபதி ஹோமத்துடன், மாலையில் பைரவர் பூஜையுடன் நிறைவடைகிறது. இரண்டாம் நாள் காலை, 6 மணிக்கு, கோபூஜை மற்றும் ரிஷப பூஜையுடன் துவங்கி, ஒன்பது கோ பூஜை, ஒன்பது சுமங்கலி பூஜை மற்றும் ஒன்பது கன்னியா பூஜைகள் நடைபெறுகிறது. தொடர்ந்து, அம்பாளுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் மற்றும் தீபாராதனை நடைபெறுகிறது. மகா நவசண்டி யாகம் உள்ளிட்ட பூஜைகளை, அரியலூர் அண்ணா நகரை சேர்ந்த செல்வமுத்து குமாரசாமி தலைமையிலான சிவாச்சாரியார்களும், யாக பூஜைக்கான ஏற்பாடுகளை வக்கீல் முருகன் உள்ளிட்டோரும் செய்து வருகின்றனர்.