Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
இன்றைய சிறப்பு! கருப்பராயன் கோவில் கும்பாபிஷேக விழா துவங்கியது! கருப்பராயன் கோவில் கும்பாபிஷேக விழா ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
நாங்கூர் கோவிலில் 11 கருடசேவை உற்சவம் கோலாகலம்!
பகிர்க copied
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

22 ஜன
2015
02:01

மயிலாடுதுறை: திருநாங்கூர் நாராயண பெருமாள் கோவிலில் நேற்று இரவு நடந்த கருட சேவை உற்சவத்தில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு 11  பெருமாளையும், திருமங்கையாழ்வாரையும் வழிபட்டனர்.

Default Image
Next News

நாகை மாவட்டம் சீர்காழியை அடுத்த நாங்கூரில் 11 திவ்ய தேச கோவில்கள் உள்ளன. இந்த கோவில்க ளில் இருந்து ஆண்டு தோறும் தை  அமாவாசைக்கு மறு நாள் பெருமாள்கள் புறப்பட்டு நாராயண பெருமாள் கோவிலில் எழுந்தருள கருடசேவை உற்சவம் நடைபெறும். இவ்வாண்டு  தை அமாவாசைக்கு மறுநாளான நேற்று இரவு கருட சேவை உற்சவம் நடைபெற்றது. இதையொட்டி இரு தினங்களுக்கு முன்பு திருநகரியிலிலுந்து  திருமங்கையாழ்வார் புறப்பட்டு 11 பெருமாளையும் கருடசேவைக்கு அழைத்து விட்டு நேற்று காலை நாராயணபெருமாள் கோவிலுக்கு வந்தார்.  மதியம் நாங்கூர் ஸ்ரீ நாராயணபெருமாள், ஸ்ரீ குடமாடு கூத்தர், ஸ்ரீ செம்பொன்னரங்கர், ஸ்ரீபள்ளிகொண்ட பெருமாள், ஸ்ரீ புருஷோத்தமன், ஸ்ரீ வைகுந்த நாதர், திருக்காவாளம்பாடி ஸ்ரீ கோபாலன், திருமணி கூடம் ஸ்ரீ வரதராஜ பெருமாள்,கீழச்சாலை ஸ்ரீமாதவபெருமாள், திருபார்த்தன் பள்ளி ஸ்ரீ பார்த்தசாரதி, அண்ணன் கோவில் ஸ்ரீ அண்ணன் பெருமாள் ஆகிய 11பெருமாள்கள், தாயாருடன் நாங்கூர் ஸ்ரீ நாராயண பெருமாள் கோவிலுக்கு வந்தனர். அவர்களை திருமங்கையாழ்வார் வரவேற்கும் நிகழ்ச்சி நடந்தது.

தொடர்ந்து கோவில் மண்டபத்தில் 11 பெருமாள்களும் எழுந்தருள  அவர்களுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. இரவு 1 மணிக்கு பெருமாள்கள் தங்க கருடவாகனத்தில் கோவில் முன்பு எழுந்தருள திரும ங்கையாழ்வார் மங்களா சாசனம் செய்யும் நிகழ்ச்சி நடைபெற்றது. இரவு 1:30 மணிக்கு மகா தீபாராதனை செய்யப்பட் டது. இதில் தமிழ்நாடு  மட்டுமன்றி பிறமாநிலங்களில் இருந்தும் திரளான பக்தர்கள் வந்து 11 பெருமாள்களையும் ஒரே இடத்தில் வழிபட்டனர். தொடர்ந்து இரவு 2 மணிக்கு வீதியுலா நிகழ்ச்சி நடந்தது. கருட சேவை உற்சவத்தில் நாகை மாவட்ட கலெக்டர் பழனிசாமி,எஸ்.பி., அபினவ்குமார் ஆகியோர் கலந்து  கொண்டார்.விழாவையொட்டி சீர்காழி டி.எஸ்.பி., வெங்கடேசன் தலைமையில் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். தீ யனைப்பு மீட்பு படையினர் கண்கானிப்பு பணியில் ஈடுபட் டிருந்தனர். சீர்காழி, மயிலாடுதுறையிலிருந்து அரசு சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மகாளய பட்சத்தில் வரும் பரணி நட்சத்திரத்தை மகா பரணி ஆகும். பரணி என்பது எமதர்ம ராஜனுக்குரிய நட்சத்திரம் ... மேலும்
 
temple news
உடுமலை: உடுமலை, ஐஸ்வர்யா நகரில் அமைந்துள்ள, ஸ்ரீ கற்பக விநாயகர், ஸ்ரீ வள்ளி தேவசேனா சமேத ஸ்ரீ கல்யாண ... மேலும்
 
temple news
 காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் காமாட்சியம்மன் கோவிலில் நவராத்திரி விழா அக்., 10 தேதி தொடங்கி, 22ம் தேதி வரை ... மேலும்
 
temple news
முதுகுளத்துார்: முதுகுளத்துார் அருகே மேலபண்ணைக்குளம் கிராமத்தில் பருவமழை பெய்து விவசாயம் செழிக்க ... மேலும்
 
temple news
கோவை;  புரட்டாசி மாதம் இரண்டாவது செவ்வாய்க்கிழமையை முன்னிட்டு கோவை ராம் நகர் பட்டேல் ரோடு ஸ்ரீ பால ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar