பதிவு செய்த நாள்
23
ஜன
2015
11:01
அவிநாசி : அவிநாசி மொண்டிபாளையம், வெங்கடேசப் பெருமாள் கோவில் தேர்த்திருவிழா, வரும் 26ல் துவங்குகிறது; பிப்., 2ல் தேரோட்டம் நடக்கிறது. மேலத்திருப்பதி என அழைக்கப்படும், மொண்டிபாளையம் வெங்கடேசப் பெருமாள் கோவில் தேர்த்திருவிழா, வரும் 26ல் வாஸ்து சாந்தியுடன் துவங்குகிறது. 27ல், எம்பெருமானுக்கு திருக்காப்பு கட்டுதல், கருடாழ்வார் திருமஞ்சனம், கொடியேற்றம், அன்ன வாகனத்தில் வீதி உலா நடக்கிறது. 28ல் வீதி உலா, சிம்ம வாகனத்தில் புறப்பாடு, 29ல், அனுமந்த வாகனம், 30ல் கருட வாகனத்தில் வீதி உலா நடக்கிறது. வரும் 31ல், அம்மன் அழைத்தல், திருக்கல்யாணம், புஷ்பக விமானத்தில் சுவாமி புறப்பாடு நடக்கிறது.பிப்., 1ல் சுவாமி வீதி உலா, இரவு 8:00க்கு, யானை வாகனத்தில் வீதி உலா நடக்கிறது. பிப்., 2ல் காலை 5:00 முதல் 6:00 மணிக்கு, பெருமாள் திருத்தேருக்கு எழுந்தருளும் நிகழ்ச்சி, காலை 11:0க்கு, திருத்தேர் வடம் பிடித்தல் நிகழ்ச்சி நடக்கிறது. பிப்., 3 இரவு 8:00க்கு பரிவேட்டை, குதிரை வாகனத்தில் பெருமாள் புறப்பாடு, 4ம் தேதி, இரவு 8:00க்கு, சேஷ வாகனத்தில் புறப்பாடு மற்றும் தெப்பத்திருவிழா நடக்கிறது. 5ம் தேதி, காலை 8:00க்கு, மகா திருமஞ்சனம், மகா தரிசனம், மஞ்சல் நீராடும் நிகழ்ச்சி நடக்கிறது.