சென்னை: சைதாப்பேட்டை காரணீஸ்வரர் கோவிலில், காலணி காப்பகம் அமைக்க கோரிக்கை எழுந்துள்ளது. சைதாப்பேட்டையில், உள்ள காரணீஸ்வரர் கோவிலில் தினசரி நுாற்றுக்கணக்கானோர் சுவாமி தரிசனம் செய்கின்றனர். அங்கு, காலணி காப்பகம் இல்லை. அதனால், பக்தர்கள் கோவில் வாசலில் விட்டு செல்லும் செருப்புகள், மாயமாகி விடுகின்றன. இதற்கு தீர்வாக, இலவச காலணி காப்பகம் அமைக்க வேண்டும் என, ÷ காரிக்கை எழுந்துள்ளது.