கோவை : ரத்தினபுரியில் புனித சின்னப்பர் ஆலய தேர் திருவிழா நடந்தது. புனித சின்னப்பர், இயேசு கிறிஸ்துவின் விசுவாசத்தோடு வாழ்ந்தவர். இப்புனிதருக்கு நன்றி கூறும் விழாவாகவும், கடவுளை ஆராதிக்கும் விழாவாகவும் தேர்திருவிழா நடக்கிறது.கோவை மறைமாவட்ட ஆயர் தாமஸ் அக்குவினாஸ், தஞ்சை மறைமாவட்ட ஆயர் ஜான்பிரிட்டோ, புனித சின்னப்பர் ஆலய பங்கு தந்தை ஜான்பால் வின்சென்ட், எட்வர்ட் ஞானசேகர் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.