ராஜபாளையம்: ராஜபாளையம் மாயூராநாதசுவாமி கோயிலில் கும்பாபிஷேகவிழா ஜன. 23ல் துவங்கியது. ஹோமம், யாகசாலை பூஜை, தீபாராதனை என மூன்றுநாள் நடந்தன. ஜன. 26ல் காலை 9.30 மணிக்கு கும்பாபிஷேகம் நடந்தது.
ராஜபாளையம் மற்றும் சுற்று கிராமங்களை சேர்ந்த பக்தர்கள் கலந்துகொண்டனர். பிற்பகல் சிறப்பு அன்னதானம் நடந்தது. அன்று மாலை 5 மணிக்கு மகாஅபிஷேகம், மாயூரநாதசுவாமி, அஞ்சல்நாயகி அம்மன் திருக்கல்யாணம் நடந்தது. இரவு 7 மணிக்கு பஞ்சமூர்த்திகள் வழிபாடு நடந்தது. அசோகன் டி.எஸ்.பி., தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். நிலைய அதிகாரி பரமசிவன் தலைமையில் தீயணைப்பு துறையினர் பணியில் இருந்தனர்.