அவலூர்பேட்டை: கன்னலம், வளத்தியில் கிருத்திகை சிறப்பு வழிபாடு நடந்தது. மேல்மலையனூர் ஒன்றியம் கன்னலம் செல்வ முருகன் கோவில் மற்றும் வளத்தி சக்தி முருகன் கோவிலில் தை மாத கிருத்திகையை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடந்தது. வள்ளி, தெய்வானை சமேத முருகப் பெருமானுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், தீபாரதனை நடந்தது. இரண்டு கோவில்களிலும் அன்னதானம் வழங்கினர்.