குருவாயூர் கோயிலில் சாயங்காலம் மட்டுமே தீபாரதனை செய்யப்படுகிறது. ஏழு அடுக்கு விளக்கு, ஐந்து திரி, நாகப்பட விளக்கு, ஒற்றைத்திரி விளக்கு என்று பல விளக்குகளை ஏற்றி ஆராதிக்கிறார்கள். இறுதியில் கற்பூர ஆரத்தி. அப்போது முப்பத்து முக்கோடி தேவர்களும் குருவாயூரப்பனை வழிபடுவதாக ஐதிகம்.