நெட்டப்பாக்கம் : சொரப்பூர் திரவுபதியம்மன் கோயிலில் தீமிதி விழா நாளை 17ம் தேதி நடக்கிறது. கரையாம்புத்தூர் அடுத்த சொரப்பூர் திரவுபதியம்மன் கோயில் தீமிதி திருவிழா கடந்த 15ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. விழாவையொட்டி தினமும் அம்மனுக்கு அபிஷேக, ஆராதனை சுவாமி வீதியுலா நடந்தது. முக்கிய நிகழ்ச்சியான தீமிதி விழா நாளை 17ம் தேதி மதியம் 12 மணிக்கு நடக்கிறது. விழா ஏற்பாடுகளை கோயில் நிர்வாகிகள் மற்றும் கிராம மக்கள் செய்து வருகின்றனர்.