ஸ்ரீவில்லிபுத்தூர் அண்ணாமலையார் கோயில் கும்பாபிஷேகம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
30ஜன 2015 12:01
ஸ்ரீவில்லிபுத்தூர் : திருவண்ணாமலையில் உண்ணாமலையார் சமேத அண்ணாமலையார் கோயில் கும்பாபிஷேகம் நடந்தது.இதையொட்டி யாகசாலை பூஜைகளும், ஹோமங்கள், கோ பூஜை நடந்தது. உண்ணாமலையார் நற்பணி குழு சார்பில் பெண்கள் முளைப்பாரி ஊர்வலம் நடந்தது. தொடர்ந்து கோபுர கும்பாபிஷேம், மூலவர், பரிவார தெய்வங்களுக்கு கும்பாபிஷேகம் நடந்தது. பூஜைகளை சார்ராம் சர்மா நடத்தி வைத்தார். தொடர்ந்து அன்னதானம் நடந்தது.ஏற்பாடுகளை அறக்குழு தலைவர் கயிலை முனியாண்டி தலைமையில் அண்ணாமலை, உண்ணாமலையார் நற்பணி குழுவினர் செய்தனர். ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.