பதிவு செய்த நாள்
30
ஜன
2015
12:01
திருவாரூர்; திருவாரூர் அருகே, பேரளத்தில் உள்ள லலிதாம்பிகை கோவிலில், 60 லட்சத்தில் திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு, ஃபிப்ரவரி, 8ம் தேதி மகா கும்பாபிஷேகம் நடைபெறுகிறது. திருவாரூர் மாவட்டம், பேரளம் அருகே உள்ள திருமீயச்சூர் கிராமத்தில், வேளாக்குறிச்சி ஆதீன மடத்திற்கு சொந்தமான லலிதாம்பாள் சமேத மேகநாத ஸ்வாமி கோவிலில் கடந்த, 2,000ம் ஆண்டு கும்பாபிஷேகம் நடந்தது. அதற்கு பின், நன்கொடையாளர்கள் உதவியுடன், 60 லட்சம் செலவில் திருப்பணிகள் முடிக்கப்பட்டு, ஃபிப்ரவரி, 8ம் தேதி மகா கும்பாபிஷேகம் நடைபெறுகிறது. இதற்கான ஏற்பாடுகளை, கோவிலின் ஆதீன கர்த்தா சத்தியஞான மகாதேவ தேசிக பரமாச்சார்ய சுவாமிகள் தலைமையில், ஆதீன இளவரசர் அஜபா நடேஸ்வர சுவாமிகள், கோவில் செயல் அலுவலர் முருகன் மற்றும் அலுவலர்கள் செய்து வருகின்றனர்.