விழுப்புரம் : நன்னாடு கிராமத்தில் அமைந்துள்ள மாரியம்மன் கோயிலில் வரும் 19ம் தேதி கும்பாபிஷேகம் நடக்கிறது. விழாவையொட்டி வரும் 17ம் தேதி மாலை 5 மணிக்கு கணபதி பூஜை, வாஸ்து சாந்தி, கும்ப அலங்காரம், பூர்ணாஹூதி தீபாராதனை நடக்கிறது. பின் 18ம் தேதி காலை 8 மணிக்கு இரண்டாவது கால பூஜை ஹோமம், மாலை 6 மணிக்கு மூன்றாவது கால யாக பூஜை நடக்கிறது. தொடர்ந்து 19ம் தேதி காலை 8 மணிக்கு நான்காவது கால யாகபூஜை, தத்துவார்ச்சனை, நாடிசந்தானம், மகாபூர்ணாஹூதி தீபாராதனை நடக்கிறது. காலை 10 மணிக்கு மகா கும்பாபிஷேகம் நடக்கிறது. இரவு அம்மன் வீதியுலா நடக்கிறது.