பதிவு செய்த நாள்
02
பிப்
2015
03:02
மயிலாப்பூர்: மயிலாப்பூர் முண்டக்கண்ணி அம்மன் கோவிலில், வரும் 6ம் தேதி, 108 திருவிளக்கு பூஜை நடக்கிறது.
இதையொட்டி, அன்று மதியம் 12:00 மணிக்கு, மூலவர் அம்மனுக்கு, மகா அபிஷேகமும், உற்சவர் அம்மனுக்கு மகாலட்சுமி அலங்காரமும், சிறப்பு பூஜையும் நடக்கிறது. இதையடுத்து, மாலை, 4:00 மணிக்கு பிரதான குத்துவிளக்கு, பட்டுப்புடவை, சாத்துப்படியுடன் சிறப்பு அலங்காரமும், 108 திருவிளக்குகளுக்கு தனிதனியாக சுமங்கலிகள் அலங்காரமும் நடக்க உள்ளது.
தொடர்ந்து, கணபதி பூஜை, வேதபாராயணம், லலிதா சகஸ்ர நாமம், 108 விளக்குகளுக்கு துாப தீப
ஆராதனையும், இரவு 7:00 மணிக்கு, அம்மன் திருவீதி உலாவும் நடக்கிறது.