காரைக்குடி: குன்றக்குடி சண்முகநாத பெருமான் கோயில் தைப்பூச திருவிழா 24ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. சுவாமி வெள்ளி ரதத்தில் வீதி உலா வந்தார்.
முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் நேற்று நடந்தது.காலை 5.15 மணிக்கு சுவாமி திருத்தேருக்கு எழுந்தருளல், அதை தொடர்ந்து மாலை 3.30 மணிக்கு சுவாமி வள்ளி, தெய்வானையுடன் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி, நான்கு ரத வீதியில் தேரோட்டம் நடந்தது. இரவு எட்டு மணிக்கு வெள்ளி ரதத்தில் சுவாமி வீதி உலா நடந்தது. இன்று காலை 11 மணிக்கு வெள்ளி ரத ஊர்வலமும், மாலை 6 மணிக்கு தீபாராதனை நடக்கிறது.