பதிவு செய்த நாள்
03
பிப்
2015
02:02
உளுந்தூர்பேட்டை : உளுந்தூர்பேட்டை தாலுகா திருநறுங்குன்றத்தில் உள்ள ஸ்ரீ பகவான் அப்பாண்ட நாதர் ஜினாலயத்தில், நற்காட்சி திருவிழா நடந்தது.
விழாவையொட்டி நேற்று முன்தினம் அதிகாலை 5:30 மணிக்கு ஜின சுப்ரபாதம், காலை 8 மணிக்கு திருவறக்கொடி ஏற்றும் நிகழ்ச்சி நடந்தது. காலை 8:15 மணிக்கு ஸ்ரீ ஜினவாணி தேவிக்கு சதாஷ்டக வழிபாடு, தொடர்ந்து நற்காட்சியருக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது.
பின்னர், நடந்த பாராட்டு விழாவில் சுற்றுலா பண்பாட்டு மற்றும் அறநிலையத்துறை தலைமை இணை செயலாளர் கண்ணன் ஐ.ஏ.எஸ்., கலந்துக் கொண்டார்.மாநில சிறுபான்மையினர் நல வாரிய உறுப்பினர் சுதிர்லோதா, தியான நூலை வெளியிட்டார். தொடர்ந்து தியான நிகழ்ச்சியும், காலை 11:50 மணிக்கு தலைமை அர்ச்சகர் பரத சக்கரவர்த்தி தலைமையில் பூஜைகள் துவங்கியது.
மதியம் 1.45 மணிக்கு அகிம்சை நடை சிறப்புரை நிகழ்ச்சியும், மதியம் 2.15 மணிக்கு ஆரணி, சைதாப்பேட்டை ஜ்வாலாமாலினி கலை குழுவினரின் நிகழ்ச்சியும் நடந்தது. மாலை மேளக் கச்சேரியும், மலைமேல் உற்சவம் நடந்தது.விழாவில் குப்புசாமிஜெயின், மலர்கொடி குடும்பத்தினர் உணவு வழங்கினர். ஷேமபிசாத், அருண்பிரசாத் ஆகியோர் சுவாமிக்கு மலர், மாலைகளை வழங்கினர்.