பதிவு செய்த நாள்
03
பிப்
2015
02:02
பெங்களூரு: ஹலசூரு கங்காதர் செட்டி சாலை, மகான் ஒடுக்கத்தூர் சுவாமிகள் மடம் மற்றும் தண்டாயுதபாணி சுவாமி கோவிலில், இன்று துவங்கி, 11ம் தேதி வரை, குரு மகான் ஒடுக்கத்தூர் சுவாமிகள் நூற்றாண்டு திருவிழா நடக்கிறது.
முதல் நாளான இன்று, தைப்பூசத்தை முன்னிட்டு, காலை 7:30 மணியிலிருந்து, 10:30 மணி வரை, மூலவர் அபிஷேகம், பூஜைகள், அருட்பா பாராயணம் நடக்கின்றன.
அன்னதானம்: நாளை (4ம் தேதி), மகா கணபதி ஹோமம்; 5ம் தேதி, ஸ்கந்த ஹோமம்; 6ம் தேதி, லட்சுமி ஹோமம்; 7ம் தேதி, காலை 7:30 மணியிலிருந்து, 10:30 மணி வரை, நவக்கிரக ஹோமம்; 8ம் தேதி, காலை 7:30 மணியிலிருந்து, 8:30 மணி வரை, கிராம தேவதை ஹோமம், மகா சண்டி ஹோமம், கலச ஸ்தாபனம், மாலையில் ஹோமம், பூஜை; 9ம் தேதி, மகா சண்டி ஹோமம், பூஜை; 10ம் தேதி, ருத்ர மிருத்ஞ்ய ஹோமம் நடக்கிறது. திருவிழாவின் இறுதி நாளான 11ம் தேதி, ருத்ர மிருத்ஞ்ய ஹோமம், பெங்களூரு கைலாச ஆசிரமம் ஸ்ரீஜெயந்திரபுரி சுவாமிகள் அருளாசி உரை, திருமடத்தின் நூற்றாண்டு சிறப்பிதழ் வெளியீடு நடக்கிறது. பிற்பகல் 12:30 மணிக்கு, அன்னதானம் வழங்கப்படுகிறது.
அழைப்பு: விழா நாட்களில், தினமும் மாலை 6:30 மணியிலிருந்து சொற்பொழிவு, பஜனை, பக்தி பாடல்கள், இசை நிகழ்ச்சி நடக்கின்றன. முதல் நாளான இன்று மாலை, சித்தர்களும் நாளிகரும் என்ற தலைப்பிலும், இரண்டாம் நாளான நாளை, செய்யும் தொழிலே தெய்வம் என்ற தலைப்பிலும், மூன்றாம் நாளான, 5ம் தேதி, எது தர்மம் என்ற தலைப்பிலும் சுகி சிவம் சொற்பொழிவு நிகழ்த்துகிறார். பக்தர்கள் விழாவில் கலந்து கொள்ளுமாறு, ஆலய அறங்காவலர்கள் தலைவர் ஆறுமுகம், துணைத் தலைவர் சிவகுரு, செயலர் துரைராஜ் மற்றும் உறுப்பினர்கள் அழைப்பு விடுத்துள்ளனர்.