மதுரை: மதுரை மீனாட்சி அம்மன் கோயில் தெப்பத்திருவிழாவை முன்னிட்டு இன்று மாலை 4 மணி முதல் இரவு 11 மணி வரை தெப்பக்குளம் பகுதியில் போக்கு வரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
அருப்புக்கோட்டை, ராமநாதபுரத்திலிருந்து ராமநாதபுரம் ரோடு செக் போஸ்ட் வழியாக நகருக்குள் வரும் அனைத்து வாகனங்களும், சிவகங்கை ரிங்ரோடு சந்திப்பு வழியாக ஆவின் சந்திப்பிற்கு சென்று நகருக்குள் செல்ல வேண்டும். மதுரையிலிருந்து காமராஜர் சாலை - ராமநாதபுரம் செக் போஸ்ட் வழியாக ரிங் ரோட்டிற்கு செல்லக்கூடிய அனைத்து வாகனங்களும் குருவிக்காரன் சாலை வழியாக ஆவின் சந்திப்பு, சிவகங்கை ரோடு செக் போஸ்ட் வழியாக ரிங்ரோடு செல்ல வேண்டும்.
அனுப்பானடி செல்லும் பஸ்கள் அனைத்தும் காமராஜர் சாலை நிர்மலா பள்ளி அருகில் உள்ள பெட்ரோல் பல்க் அருகில் நிறுத்தி திரும்ப வேண்டும்.அனுப்பானடியிலிருந்து செல்லும் பஸ்கள், வாகனங்கள் பழைய ராமநாதபுரம் ரோடு வழியாக செல்ல வேண்டும். என போலீஸ் கமிஷனர் சைலேஷ் குமார் யாதவ் தெரிவித்துள்ளார்.