பதிவு செய்த நாள்
03
பிப்
2015
03:02
உடுமலை : உடுமலை, தில்லை நகரில் உள்ள ரத்தினாம்பிகை உடனமர் ரத்தினலிங்கேஸ்வரர்
கோவில் கும்பாபிஷேகம் நேற்று நடந்தது.
கும்பாபிேஷக விழா, ஜன., 30ல் துவங்கியது. தினமும் வேள்விகள், சிறப்பு பூஜைகள், வழிபாடுகள் நடந்தன.நேற்று காலை, 6:00 மணிக்கு, பைரவர், நந்தி உள்ளிட்ட சுவாமிகளுக்கு கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது. ரத்தினலிங்கேஸ்வரருக்கு நான்காம் கால வேள்வியை தொடர்ந்து, காலை, 9:00 மணிக்கு, திருக்குடங்கள் கோவிலை வலம் வந்தன. காலை, 9:30 மணிக்கு, விமானங்களுக்கும், 10:00 மணிக்கு மூலமூர்த்திகளுக்கும் ஏராளமான சிவனடியார்கள் பொதுமக்கள் முன்னிலையில், கும்பாபிேஷகம் நடந்தது; செஞ்சேரி மலை முத்துசிவராம அடிகளார் நடத்தி வைத்தார். மதியம் ரத்தினலிங்கேஸ்வரருக்கு சிறப்பு பூஜையும், மாலை, சிறப்பு அலங்காரத்தில் சுவாமி வீதியுலாவும் நடந்தது.