காஞ்சிபுரம்: தைப்பூசத்தை ஒட்டி, வல்லக்கோட்டை சுப்ரமணிய சுவாமி கோவிலில் இன்று இரவு, கிராம தேர்த் திருவிழா நடைபெறுகிறது.
ஸ்ரீபெரும்புதூர் அருகே, வல்லக்கோட்டை சுப்ரமணிய சுவாமி கோவிலில், கடந்த மாதம் 23ம் தேதி தைப்பூச விழா கொடியேற்றத்துடன் துவங்கியது. தினமும், சிறப்பு அபிஷேகம் மற்றும் பூஜைகள் நடைபெற்று வருகின்றன.
முக்கிய நிகழ்வான கிராம தேர்த்திருவிழா, இன்று இரவு 11:00 மணி அளவில் நடைபெறுகிறது. விழாவிற்கு ஞானகிரி சன்மார்க்க சபை ஸ்தாபகர் மயிலை ஸ்ரீலஸ்ரீ இராதா கிருஷ்ணன் அடிகளார் தலைமை வகிக்கிறார். விழா ஏற்பாடுகளை வல்லக்கோட்டை சுப்ரமணிய சுவாமி கோவில் நிர்வாக அதிகாரி முத்துராஜா, காஞ்சிபுரம் இந்து சமய அறநிலையத் துறை ஆணையர் பரணிதரன் மற்றும் உள்ளாட்சி நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர்.