பதிவு செய்த நாள்
04
பிப்
2015
02:02
குறிச்சி : கோவை, வெள்ளலூரிலுள்ள வீரேஸ்வரி அம்மன் கோவில் கும்பாபிஷேக விழா நடந்தது.
கும்பாபிஷேக விழா, மூன்று நாட்களுக்கு முன், மங்கள இசை, வினாயகர் பூஜை புண்யாஹவாசனம், பஞ்சகவ்யம், மகா கணபதி ஹோமத்துடன் துவங்கியது. தொடர்ந்து, கோ பூஜை, ஆச்சார்ய அனுக்ஜை, வாஸ்து பத பூஜை, கும்ப பூஜை, தீபாராதனையும் நடந்தன. மேலும், நூதன விக்ரஹ மூர்த்திக்கு அபிஷேகம், நாமகரணம், காப்பு கட்டுதல், கும்ப அலங்காரம், பிரசாதம் வினியோகம், கோபுர கலச ஸ்தாபனம், அஷ்டபந்தன மருந்து சாத்துதல் உள்ளிட்டவை நடந்தன.
நேற்றுமுன்தினம் காலை, விநாயகர் பூஜை, இரண்டாம் கால யாக பூஜைகள், யாத்திராதானம் நடந்தன. 9:15 மணிக்கு மேல், கலசங்கள் புறப்பாடும், 9:30 மணிக்கு கோபுர கலச கும்பாபிஷேகமும் தொடர்ந்து, மூலவர் வீரேஸ்வரி அம்மனுக்கு மகா கும்பாபிஷேகமும் நடந்தன.இதையடுத்து, தசதானம், தசதரிசனம், மகாபிஷேகம், மகா தீபாராதனையும், அன்னதானமும் நடந்தன. மாலை, 6:30 மணிக்கு, திருக்கல்யாணம் நடந்தது. இன்று முதல், 48 நாட்கள் மண்டல பூஜை நடக்கிறது. ஏற்பாடுகளை, விழாக்குழுவினர் செய்திருந்தனர்.