பதிவு செய்த நாள்
04
பிப்
2015
02:02
கடம்பத்துார்: கடம்பத்துார், ஏகாத்தம்மன் கோவில் வளாகத்தில் உள்ள அய்யப்பன் கோவிலில், பிப்., 9ம் தேதி, கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது.
கடம்பத்துார் ஊராட்சிக்குட்பட்ட கசவநல்லாத்துாரில் உள்ளது ஏகாத்தம்மன் கோவில். இக்கோவிலில், புதிதாக அமைக்கப்பட்ட அய்யப்பன் கோவிலில், கும்பாபிஷேகம் பிப்., 9ம் தேதி நடைபெறவுள்ளது. முன்னதாக, 8ம் தேதி, காலை 9:00 மணிக்கு, கணபதி ஹோமம், லட்சுமி பூஜை மற்றும் கோ பூஜை நடைபெறும். அதன்பின், மாலை 4:00 மணிக்கு, வாஸ்து சாந்தியும், முதல் கால யாகசாலை பூஜையும் நடைபெறும். மறுநாள், காலை 7:00 மணிக்கு, இரண்டாம் கால யாகசாலை பூஜையும், காலை 10:30 மணிக்கு மகா கும்பாபிஷேகமும் நடைபெறும். அதன்பின், சுவாமிக்கு சிறப்பு அபிஷேகமும், ஆராதனையும் நடைபெறும்.