பதிவு செய்த நாள்
04
பிப்
2015
02:02
செஞ்சி: செஞ்சி சிறுகடம்பூர் கொத்தமங்கலம் சாலை சுப்ரமணியர் கோவிலில் தைப்பூச விழா கடந்த மாதம் 27ம் தேதி துவங்கியது. அன்று காலை 5.30 மணிக்கு கணபதி ஹோமம், வள்ளி, தெய்வானை சமேத சுப்பிரமணியருக்கு சிறப்பு அபிஷேகம் செய்து, கொடியேற்றினர். தொடர்ந்து சிறப்பு அபிஷேகமும், அலங்காரம் நடந்தது. நேற்று முன்தினம் இரவு 8 மணிக்கு சுவாமி ஊர்வலமும், நேற்று காலை தைப்பூசத்தை முன்னிட்டு காலை 5.30 மணிக்கு சுப்பிரமணியருக்கு ஞானவேள்வியும், காலை 6 மணிக்கு சக்திவேல் அபிஷேகமும், 8 மணிக்கு மகா அபிஷேகமும், 9.30 மணிக்கு சக்தி கரகம் ஊர்வலமும், பகல் 12.30 மணிக்கு குருசாமி திருமுருகனுக்கு மிளகாய் பொடி அபிஷேகமும், 2 மணிக்கு தீ மிதித்தல், செடல் சுற்றல், வேல் குத்துதலும் 4 மணிக்கு, லாரி இழுத்தல், தேர் இழுத்தல், காவடி ஆட்ட ஊர்வலமும் நடந்தது. இன்று இடும்பன் பூஜையும், காப்பு களைதலும் நடக்க உள்ளது.