திண்டிவனம்: உலக நன்மைவேண்டி நல்லியகோடன் நகர் பெருமாள் கோவிலில் 108 விளக்கு பூஜை நடந்தது. திண்டிவனம் நல்லியகோடன் நகர் அலர்மேல் மங்கை சமேத சீனிவாச பெருமாள் கோவிலில் தைப் பவுணர்மியை முன்னிட்டு உலக நன்மை வேண்டி 3ம் தேதி மாலை 6.30 மணிக்கு 108 விளக்கு பூஜை நடந்தது. மூலவருக்கு மகா அபிஷேகம், தாயார் உற்சவ மூர்த்திக்கும் சிறப்பு அலங்காரத்தில் தீபாராதனை நடந்தது.