Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
சிங்கம்புணரி கும்பாபிஷேக விழா! ஸ்ரீகன்னிகா பரமேஸ்வரி கோவில் கும்பாபிஷேகம் கோலாகலம்! ஸ்ரீகன்னிகா பரமேஸ்வரி கோவில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருத்தங்கல் காளியம்மன் கோயில் கும்பாபிஷேகம்!
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

09 பிப்
2015
12:02

சிவகாசி : திருத்தங்கல் காளியம்மன் கோயில் கும்பாபிஷேகம் நேற்று நடந்தது. ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.

திருத்தங்கல் இந்து நாடார் உறவின்முறைக்கு பாத்தியப்பட்ட காளியம்மன் கோயில் 12 ஆண்டுகளுக்கு பின் கும்பாபிஷேகத்திற்காக புதுப்பிக்கப்பட்டு, வர்ணங்களால் அலங்கரிக்கப்பட்டது. கும்பாபிஷேக விழா கணபதிஹோமத்துடன் துவங்கி முதல், இரண்டாம், மூன்றாம் கால பூஜைகள் நடந்தன. முன்னதாக பல்வேறு புன்னிய நதிகளில் இருந்து சேகரித்து வந்த தீர்த்தம் கோயிலுக்கு கொண்டு வரப்பட்டது. நேற்று நான்காம் கால பூஜைகள் மகா தீபாராதனையுடன் துவங்கி யாத்ராதானம், கும்பம் புறப்பாடு முதல் விமான கலசத்திற்கு புனித நீரால் கும்பாபிஷேகம் நடந்தது. தொடர்ந்து விநாயகர், துர்க்கையம்மன், கருப்பசாமி, காளியம்மன் விமான கலசங்களுக்கு கும்பாபிஷேகம் நடந்தது. ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர். அவர்கள் மீது புனித நீர் தெளிக்கப்பட்டது.

தொடர்ந்து சிறப்பு பூஜை, தீபாராதனை நடந்தது. அன்னதானம் வழங்கப்பட்டது. மாலையில் காளியம்மன் சிம்ம வாகனத்தில் புஷ்ப அலங்காரத்தில் வீதி உலா வந்து அருள் பாலித்தார். கும்பிஷேக ஏற்பாடுகளை திருப்பணியாளர் ராஜப்பன் தலைமையில், திருத்தங்கல் இந்து நாடார்கள் உறவின்முறை தலைவர் பாக்கியம், செயலாளர் ராமர், பள்ளிகளின் தாளாளர் கணேசன், பொருளாளர் மாணிக்கம், துணை தலைவர் குருசாமி, துணைச்செயலாளர் சத்திய மூர்த்தி, தர்மகர்தா சவுரிராஜன், நிர்வாக குழுவினர் செய்தனர்.

காரியாபட்டி: காரியாபட்டி கோவில்பட்டியில் காளியம்மன் கோயில் கும்பாபிஷேகம் நடந்தது. அதையொட்டி கலசத்திற்கு புனித நீர் ஊற்றப்பட்டது. அன்னதானம் நடந்தது.

சேத்தூர்-மேட்டுப்பட்டி மாரியம்மன் கோயில் கும்பாபிஷேகத்தையொட்டி கும்ப கலசத்திற்கு புனித நீர் தெளிக்கப்பட்டது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
ஏகாதசி விரதம் விஷ்ணு வழிபாட்டிற்கான முக்கியமான விரதமாகும்.. இன்றைய ஏகாதசி வருதினி ஏகாதசி என ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் வையாவூரில் உள்ள சோமேஸ்வரர் கோவில் உழவார பணியின்போது, முருகன் உட்பட மூன்று ... மேலும்
 
temple news
சோழவந்தான்: தென்கரை மூலநாத சுவாமி கோயிலில் கொடிமரம் பாலஸ்தாபனம் நடந்தது.இங்கு சில நாட்களுக்கு முன்பு ... மேலும்
 
temple news
பழநி: பழநி கோயில் செல்ல பயன்பட்டு வரும் ரோப் கார் சேவை மாதாந்திர பராமரிப்பு பணிக்காக ஏப்.16ல் ... மேலும்
 
temple news
விழுப்புரம்: விழுப்புரம் அடுத்த கோலியனுாரில் பிரசித்தி பெற்ற ஸ்ரீபூமி, நிலா தாயார்கள் சமேத வரதராஜ ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar