அதிகமான சுவாமி படங்களை வைத்திருப்பவர்கள் நைவேத்யமும் அதிகம் படைக்க வேண்டுமா?
பகிர்கcopied
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
11பிப் 2015 11:02
கோயிலில் நைவேத்யம் செய்வதைப் பார்த்திருக்கலாம். சிறிதளவில் பிரசாதம் வைத்துக் கொண்டு அதையே எல்லா சந்நிதிக்கும் அர்ச்சகர் எடுத்துச் செல்வார். நைவேத்யம் என்பது எல்லாவற்றையும் நமக்கு அளித்த கடவுளுக்கு நன்றி செலுத்தும் அடையாளமே. அதனால், வழக்கம்போல சிறிது பிரசாதத்தை வைத்து தீபாராதனை செய்தாலே போதும். எல்லா தெய்வங்களுக்கும் படைத்த புண்ணியம் கிடைத்து விடும்.