Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
அகங்காரம் வேண்டாமே! எல்லாம் அவர் கையில்!
முதல் பக்கம் » ஆன்மீக வகுப்பறை!
நிஜமான மகிழ்ச்சி!
பகிர்க copied
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

11 பிப்
2015
11:02

குடிப்பவர்களில் பெரும்பகுதியினரை ஒரு காலத்தில் கேட்ட போது, என் மனதில் தீராத கவலை ஏற்பட்டுள்ளது. அதை மறக்கவே குடிக்கிறேன், என்றார்கள். இன்று வளர்ச்சி பெற்ற பொருளாதாரத்தின்காரணமாக குடிப்பவர் எண்ணிக்கை பெருகியுள்ளது. அவர்களிடம் ஏன் குடிக்கிறீர்கள்? என்றால் சந்தோஷத்தைக் கொண்டாட குடிக்கிறோம், டென்ஷனைக் குறைக்க குடிக்கிறோம்,என்கிறார்கள். ஒரு திருவிழா வந்து விட்டால், எதுஇருக்கிறதோ இல்லையோ, மது இருக்கிறது.குடிப்பவர்கள் சொல்லும் இந்த இரண்டு காரணங்களுமே தற்காலிக சந்தோஷத்தை தரலாம். ஆனால், இவர்கள் இறுதியில் ஆஸ்பத்திரிக்கு தான்போகிறார்கள். குடல் போச்சு. இதயம் போச்சு. சிறுநீரகம் போச்சு என்று கதறுகிறார்கள். இதெல்லாம் தெரிந்தும்மற்றவர்கள் குடிக்கிறார்கள். மகிழ்ச்சி என்ற பெயரில் சிரமத்தை விலை கொடுத்து வாங்குகிறார்கள்.ஒரு சிலர் சினிமா, டிவி, இன்டர்நெட்டில் ஆபாசநிகழ்ச்சிகளை சந்தோஷம்தருவதாக நினைத்து பார்க்கிறார்கள். இவை கலாசார சீர்கேடு என்னும் கொடிய கேட்டை உண்டாக்குகிறது. இந்த தற்காலிக சந்தோஷங்களை தவிர்த்து விட்டு, மெய்யான சந்தோஷம் என்றால் என்ன? என்பது பற்றி பைபிள் வசனம் விளக்குகிறது.மனுஷனுடைய இருதயத்தில்உள்ள கவலை அதை (இருதயம்) ஒடுக்கும்; நல்வார்த்தையோ அதை மகிழ்ச்சியாக்கும் என்பதே அவ்வசனம். இவ்வசனத்திலுள்ள நல்வார்த்தை என்பது ஆண்டவருடைய கட்டளைகளைக் குறிப்பிடுகிறது.அந்த வார்த்தை மாம்சமாகி (மனித வடிவம்), கிருபை யினாலும் சத்தியத்தினாலும் நிறைந்தவராய் நமக்குள்ளே வாசம் பண்ணினார் என்ற வசனமும், அவர் தான்  ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து. வார்த்தையாகிய இயேசுகிறிஸ்துவே மெய்யான சந்தோஷத்தை, மகிழ்ச்சியைத் தர முடியும் என்ற வசனமும் இதை உறுதி செய்கின்றன.ஆம்.. கர்த்தரின் கட்டளையை மதியுங்கள். சம்பாதிப்பதில் பெரும் பகுதியை, நன்மைக்காக செலவிடுங்கள். ஏழைகளைக் கை துõக்கி விடுங்கள். மகிழ்ச்சியை இறைவழியில் தேடுங்கள்.

பகிர்க copied
 
மேலும் ஆன்மீக வகுப்பறை! »

வெள்ளி வியாபாரி அக்டோபர் 28,2026

வியாபாரி ஒருவர் பழைய பாத்திரங்களை கிலோ ரூ.50க்கு வாங்குவதாக கூவிக் கொண்டு போனார். பேராசை கொண்ட அமலா, ... மேலும்
 

பொறுப்பு அக்டோபர் 28,2026

பண்டிகை நாளில் இரவில் பார்ட்டிக்கு செல்வதே மகிழ்ச்சி என பலர் நினைக்கின்றனர்.  குடும்பச்சூழலை ... மேலும்
 

சிரித்த முகம் அக்டோபர் 28,2026

* சிரித்த முகத்துடன் இருப்பவரே தொழிலில் வெற்றி பெறுவர். * நல்ல மனைவியும், உடல்நலமும் அமைவது வரம்.  * ... மேலும்
 

நன்மை அக்டோபர் 28,2026

புதிய முயற்சியில் ஈடுபடும் போது ஆர்வமாக செயல்படுவது இயல்பு. நாளடைவில் அதுவே குறைந்து விடும். அதனால் ... மேலும்
 

பெற்றோருக்கு... அக்டோபர் 28,2026

ஒழுக்கம், பணிவு,  துணிவு இவற்றை சிறுவயதிலேயே குழந்தைகளுக்குச் சொல்லிக் கொடுங்கள்.  ‘நல்ல குணம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar