காசி யாத்திரை போல, வாழ்வில் ஒருமுறையாவது கைலாஷ் யாத்திரையும் செல்ல வேண்டும் என்பது ஐதீகம். தங்கமலையாய் ஜொலிக்கும் கயிலாயத்தை அப்பர், காவாய் கனகத்திரளே போற்றி என்று போற்றுகிறார். சிவ அம்சான கைலாய மலை லிங்கத்தின் பாணமாகவும், அதன் அருகிலுள்ள அம்பிகையின் அம்சமான மானசரோவர் ஏரி ஆவுடையாகவும் கருதப்படுவதால், ஒரு மாபெரும் சுயம்புலிங்கமாக இது கருதப்படுகிறது. வேறு எந்த மொழியிலும் இல்லாத அளவுக்கு, கயிலாயம் பற்றி தமிழில் ஞானசம்பந்தர், அப்பர், சுந்தரர் இயற்றிய பாடல்கள் உள்ளன. இந்துக்கள் மட்டுமின்றி புத்த, சமண, பொம்பா மதத்தினரும் கயிலாய மலையை வழிபடுகின்றனர்.