காவிரியாற்றில் நீராடிய சோழ மன்னன் ஒருவனின் முத்து மாலை தண்ணீரில் விழுந்து விட்டது. மன்னன் வருத்தத்துடன், திருவானைக் காவல் ஜம்புகேஸ்வரரைத் தரிசிக்கச் சென்றான். அங்கு அர்ச்சகர், காவிரி தீர்த்தத்தால் ஜம்புகேஸ்வரருக்கு அபிஷேகம் செய்தார். அபிஷேக குடத்தில்இருந்து மன்னனின் முத்துமாலை ஜம்புகேஸ்வரர் மீது விழுந்தது.ஆச்சரியப்பட்ட மன்னன் திருவானைக்காவல் கோயிலில் திருப்பணி செய்ய உத்தரவுஇட்டான். முத்து மாலையை முத்தாரம் என குறிப்பிடுவர். அதன் பெயரால் இக்கோயிலில் ஆரம்விட்டான் கோபுரம் இருக்கிறது. தொலைந்த பொருட்கள், பிறரிடம் ஏமாந்த பொருள், பணம் மீண்டும் கிடைக்க இந்த கோபுரத்தைத் தரிசித்து வரலாம்.