ஆதிசங்கரர் கங்கைக்கரைக்கு வந்த போது, நான்குநாய்களுடன் ஒரு புலையனும்(சுடுகாட்டில் பணிபுரிபவர்), அவரது மனைவியும் குறுக்கிட்டனர். ஒரு சீடன் அவர்களிடம், தாழ்ந்த ஜாதியில் பிறந்த நீங்கள், குருநாதர் வரும் போது இப்படி குறுக்கே போகிறீர்களே? என கண்டித்தார். அதற்கு புலையன், ஜாதி எதுவானாலும் எல்லா உயிர்களிலும் கடவுளே குடியிருக்கிறார் என்பது உமக்குத் தெரியாதா? என கோபித்தான். உடனே சங்கரர், நீ சொல்வது சரியே! அவனன்றி ஓரணுவும் அசையாது. அறியாமல் சொன்ன சீடனை மன்னித்து விடு என்று வேண்டினார். அப்போது புலையனும், அவன் மனைவியும் சிவபார்வதியாகவும், நாய்கள் நான்கு வேதங்களாகவும் மாறி காட்சி தந்தனர். அந்த இடத்தில் ஆதிசங்கரரால் இயற்றப்பட்ட நுõல் மானிஷா பஞ்சகம். மனித தர்மம் பற்றி இந்த நுõல் குறிப்பிடுகிறது.