நைனார்மண்டபம் நாகமுத்து மாரியம்மன் கோவிலில் விளக்கு பூஜை!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
11பிப் 2015 12:02
புதுச்சேரி: நைனார்மண்டபம், நாகமுத்து மாரியம்மன் கோவிலில், 108 விளக்கு பூஜை நடந்தது. விழாவை முன்னிட்டு, காலையில் அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனையும், மாலை 6:00 மணிக்கு, 108 விளக்கு பூஜையும் நடந்தது. ஏராளமான பெண்கள் கலந்து கொண்டு, விளக்கு பூஜை செய்து அம்மனை வழிபட்டனர்.