பதிவு செய்த நாள்
17
பிப்
2015
12:02
சென்னை: மகா சிவராத்திரியை முன்னிட்டு, சென்னையில் பூஜை மற்றும் அபிஷேக பொருட்களின் விலை உயர்ந்தது. சென்னையில் இன்று பல சிவாலயங்களில், மகா சிவராத்திரி கொண்டாடப்படுகிறது. அதை முன்னிட்டு, நேற்று முன்தினம் வரை, 10, 15 ரூபாய்க்கு விற்ற சாமந்தி பூ முழம் ஒன்று, 30 ரூபாய், 30 ரூபாய்க்கு விற்ற மல்லிகைப்பூ, முழம் ஒன்று, 40 முதல் 50 ரூபாய் வரை விற்கப்படுகிறது. 15 முதல் 20 ரூபாய்க்கு விற்ற இளநீர், 25 முதல் 30 ரூபாய், 15 முதல் 18 ரூபாய்க்கு விற்ற தேங்காய் ஒன்று, 20 முதல் 25 ரூபாய், வாழைப்பழம் ஒன்று, 5 ரூபாய், பால் லிட்டர், 54 ரூபாய், தயிர் லிட்டர், 60 முதல் 70 ரூபாய் வரை விற்கப்படுகிறது. வில்வ இலை ஒரு பாக்கெட், 10 ரூபாய், ஊதுவத்தி, 10 ரூபாய், பன்னீர் 100 மி.லி., 15 முதல் 20 ரூபாய் என, நேற்று விற்பனையாகின.