பழநி மாரியம்மன் கோயில் மாசித்திருவிழா: அடிப்படை வசதிகள் இல்லை!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
17பிப் 2015 12:02
பழநி : பழநி மாரியம்மன்கோயிலில் மாசி திருவிழாவை முன்னிட்டு வரும் பக்தர்களுக்கு குடிநீர், கழிப்பறை போன்ற அடிப்படை வசதிகளை செய்து கோயில் நிர்வாகம் தரவேண்டும். பழநி மாரியம்மன் கோயில் முக்கிய விழாவான மாசித்திருவிழா பிப்.,13ல் முகூர்த்தக்கால் நாட்டுதலுடன் துவங்கி 21 நாட்கள் மார்ச்-5வரை நடக்கிறது. இதில் முக்கிய நிகழ்ச்சியான திருக்கம்பம் சாட்டும் விழா இன்று இரவும் (பிப்.,17ல்) மற்றும் மார்ச்-3ல் திருக்கல்யாணமும், மார்ச்-4ல் தேர்த்திருவிழாவும் நடக்கிறது. இதனை முன்னிட்டு நாள்தோறும் நூற்றுக்கணக்கான பக்தர்கள் வருகின்றனர்.அவர்களுக்கு தேவையான குடிநீர்வசதி, கழிப்பிடவசதிகள் போதுமானதாக இல்லை. விழாக்காலம் என்பதால் கூடுதல் குடிநீர் தொட்டிகள், கழிப்பறை வசதிகள் செய்துதரவேண்டும். செவ்வாய், வெள்ளி கிழமைகளில் கூட்டநெரிசலை தவிர்க்க, வரிசையை ஒழுங்கு படுத்த கூடுதல் போலீசார், பாதுகாவலர்களை பணியில் ஈடுபடுத்தவேண்டும் என பக்தர்கள் கோரிக்கைவிடுத்துள்ளனர்.