பதிவு செய்த நாள்
18
பிப்
2015
03:02
விழுப்புரம்: சிவராத்திரியொட்டி விழுப்புரம் தெய்வ தமிழ் சங்கம் சார்பில் சிவாலய நடை பயணம் சென்றனர். கைலாசநாதர் கோவிலில் இருந்து புறப்பட்ட நடை பயணத்தை சேர்மன் பாஸ்கரன்
துவக்கி வைத்தார். கீழ்பெரும்பாக்கம் பசுபதீஸ்வரர், மகாராஜபுரம், ஆதிவாலீஸ்வரர் கோவில்களுக்கு சென்ற நடை பயணத்தில், கவுன்சிலர்கள் வழக்கறிஞர் செந்தில், அபிராமன், மாணவ ரணி முத்துகுமரன், தமிழ் சங்க நிர்வாகிகள் வெங்கட சுப்ரமணி, கணேசன், சிவக்குமார், சீனுவாசன், சூர்யநாராயணன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.