பதிவு செய்த நாள்
19
பிப்
2015
12:02
நாகப்பட்டினம்: மகா சிவராத்திரியை முன்னிட்டு,நாகையில் அமைந்துள்ள பன்னிரு சிவாலாயங்களிலும் நேற்று முன்தினம் இரவு நடந்த சிறப்பு பூஜைகள்,நாட்டியாஞ்சலி நிகழ்ச்சிகளில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். மகா சிவராத்திரியை முன்னிட்டு,நாகையில் அமைந்துள்ள அகத்தீஸ்வரர், காயாரோகண சுவாமி,காசி விஸ்வநாதர்,அமர நந்தீஸ்வரர், மலையீஸ்வரன், கட்டியப்பர்,நடுதலஸ்வரர்,அழகிய நாதர் ,வீரபத்திரர்,சொக்கநாதர், சட்டையப்பர், நாகநாதர் ஆகிய பன்னிரு சிவாலாயங்களிலும்,நான்கு கால சிறப்பு அபிஷேக,ஆராதனைகள் நடந்தது. நாகை.காயாரோகண சுவாமி உடனுறை நீலாயதாட்சி அம்மன் கோவிலில்,1008 பிருத்வி லிங்க சிவநாம அர்ச்சனையும்,நாட்டியாஞ்சலி நிகழ்ச்சியில் சிறப்பு நிகழ்ச்சியாக சென்னை,டாக்டர் தீப பிரியா லட்சுமியின் திருமூலர் ஆனந்த கூத்தன் நாட்டியம் நடைபெற்றது. நிகழ்ச்சிகளில் உள்ளூர் மற்றும் வெளியூர்களில் இருந்து வந்திருந்த திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.