கீழக்கரை : உத்திரகோசமங்கை மங்களநாதர் சுவாமி சன்னதியில் சிவராத்திரியை முன்னிட்டு நேற்று முன்தினம் இரவு 9 முதல் நேற்று அதிகாலை 4 மணி வரை ஆறு கால பூஜை நடந்தது. 18 வகையான அபிஷேகங்கள் செய்யப்பட்டு, சிறப்பு அலங்காரத்தில் மூலவர் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். பக்தர்கள் பஜனைகள் செய்து வழிபட்டனர். ஏற்பாடுகளை சமஸ்தான நிர்வாகத்தினர் செய்திருந்தனர்.கீழக்கரை சொக்கநாதர் கோயிலில் மூலவருக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. இரவு முழுவதும் கண்விழித்து தேவாரம், திருவாசகபாடல்களை பக்தர்கள் பாடினர். திருப்புல்லாணி, வைகை, நத்தம், ஆகிய கிராமங்களில் நடந்த பாரிவேட்டை திருவிழாவில் பக்தர்கள் பொங்கலிட்டும், கிடா வெட்டியும் நேர்த்தி கடன் செலுத்தினர்.திருவாடானை: திருவாடானை ஆதிரெத்தினேஸ் வரர், திருவெற்றியூர் பாகம்பிரியாள், சோழகன்பேட்டை சந்தனமாரியமமன், தொண்டி சிவன் கோயில் உட்பட பல கோயில்களில் மகாசிவராத்திரியை முன்னிட்டு சிறப்பு அபிஷேகம், ஆராதனைகள் நடந்தது. இரவு முழுவதும் நடந்த பூஜையில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.