ஆழ்வார்குறிச்சி இசக்கியம்மன் கோயிலில் சீரமைப்பு பணி துவக்கம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
20ஜூன் 2011 10:06
ஆழ்வார்குறிச்சி : ஆழ்வார்குறிச்சி சாலை இசக்கியம்மன் கோயில் கும்பாபிஷேகத்திற்கான கோயில் சீரமைப்பு பணிகள் துவங்கியது. ஆழ்வார்குறிச்சியில் தென்காசி - அம்பாசமுத்திரம் மெயின்ரோட்டில் சாலை இசக்கியம்மன் கோயில் உள்ளது. இங்கு மகா கணபதி, சுப்பிரமணியர், இசக்கியம்மன், ஈனஇசக்கி, மாடசுவாமி உட்பட பரிவார தேவதைகள் எழுந்தருளியுள்ளனர். இக்கோயிலில் கும்பாபிஷேகம் நடத்துவதற்கான சீரமைப்பு திருப்பணிகள் துவங்கியுள்ளது. இதனை தெடார்ந்து வரும் ஜூலை 13ம் தேதி யாகசாலை பூஜைகள் துவங்குகிறது. 15ம் தேதி காலை 10 மணிக்கு மேல் 10.30 மணிக்குள் சாலை இசக்கியம்மன் மற்றும் பரிவார தேவதைகளுக்கு மகா கும்பாபிஷேகத்தை ஆழ்வார்குறிச்சி சக்தி சுப்பிரமணியபட்டர் நடத்துகிறார். மதியம் 12 மணிக்கு மகா அபிஷேகமும், சிறப்பு தீபாராதனையும், மகேஸ்வர பூஜையும் நடக்கிறது. பின்னர் திருமலையப்பபுரம் ஹரிகரன் சார்பில் அன்னதானம் வழங்கப்படுகிறது. ஏற்பாடுகளை கும்பாபிஷேக கமிட்டியினர் செய்து வருகின்றனர்.