பதிவு செய்த நாள்
20
பிப்
2015
11:02
வெள்ளக்கோவில்: வெள்ளக்கோவில் வீரக்குமார சுவாமி கோவில் தேரோட்டம் நேற்று கோலாகலமாக நடந்தது. திருப்பூர் மாவட்டம், வெள்ளக்÷ காவிலில், 18 சித்தர்களால் உருவாக்கப்பட்டு, வழிபட்ட நுõற்றாண்டு பழமைவாய்ந்த வீரக்குமார சுவாமி கோவில் உள்ளது. இங்கு, சுவாமி வீரக்குமாரராக, பாத குறடு, கவசம் அணிந்து, இடுப்பில் தாங்கு கச்சையும், உடைவாளும், குத்துவாள் ஏந்தி, தோளில் சாட்டையும், வலது கரத்தில் வேல், இடது கரத்தில் தண்டு, தலையில் சடாரத்துன் நிஷ்டா மூர்த்தியாக சுவாமி எழுந்தருளியுள்ளார். கருக்கட்டான் மரத்தின் கீழ் அமைந்திருந்த புற்றுக்கு தினமும் மாடு பால் சொரிந்ததால், சுவாமி எழுந்தருளிய தலமாக சொல்லப்படுகிறது; இன்றும், அந்த புற்று மூலவராக காட்சியளிக்கிறது; தினமும் சிறப்பு பூஜை நடத்தப்படுகிறது.
தீராத நோய்களுக்கு தீர்வும், வழக்குகளையும், வேண்டுதல்களையும் எழுதி, இங்கு கட்டினால், நினைத்தது நிறைவேறும் என்ற நம்பிக்கை பக்தர்களுக்கு உண்டு. வெடி வழிபாடு, மண் மற்றும் ஐம்பொன்னால் ஆன பிரமாண்ட குதிரை வாகனங்கள், 18 சித்தர்களின் சபை உள்ளிட்ட பல்÷ வறு சிறப்புகளை கொண்ட கோவிலாகும். பழமைவாய்ந்த இக்கோவிலில், மாசி மகா சிவராத்திரி விழா, கடந்த 17ல், பல்லய பூஜையுடன் துவங்கிய து. நேற்று முன்தினம் மாலை 5:00க்கு, சுவாமி திருத்தேருக்கு எழுந்தருளினார். இரவு 7:00க்கு, திருத்தேர் நிலை பெயர்தல் நிகழ்ச்சி நடந்தது. கோவி லில் இருந்து சிறிது துõரம் பக்தர்களால் தேர் இழுக்கப்பட்டது. நேற்று முக்கிய நிகழ்வான தேரோட்டம் நடந்தது. மாலை 5:00க்கு, ஆயிரக்கணக்கான பக்தர்களின், வீரக்குமாரா கோஷம் முழங்க தேர் இழுக்கப்பட்டது. சிறப்பு அலங்காரத்தில், வீரக்குமாரர் அருள்பாலித்தார். ஆடி அசைந்து வந்த தேர், மாலை 6:30க்கு, இரண்டாம் நிலைக்கு வந்தது. இன்று மாலை 5:00க்கு, 2ம் நாள் தேரோட்டம் துவங்கி, 6:00க்கு நிலை சேர்தல், சுவாமி தேர்க்கால் பவனி, சிறப்பு பூஜை நடக்கின்றன. விழாவையொட்டி, கோவில் வளாகத்தில் ஆன்மிக சொற்பொழிவு, கலை நிகழ்ச்சி நடந்தன.