தியாகதுருகம் பகுதியில் மகா சிவராத்திரி சிறப்பு பூஜை
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
20பிப் 2015 12:02
தியாகதுருகம்: தியாகதுருகம் பகுதியில் உள்ள சிவன்கோவில்களில் மகாசிவராத்திரி சிறப்பு பூஜை நடந்தது. ரிஷிவந்தியம் அர்த்தநாரீஸ்வரர் கோவிலில் மகாசிவராத்திரியை முன்னிட்டு மூலவர் சுயம்பு லிங்கத்திற்கு சிறப்பு தேனபிஷேகமும் மலர் அலங்காரம் செய்தனர். இரவு பூஜைகள் நடந்தது. பக்தர்கள் கண்விழித்து சிவவழிபாடு செய்தனர். பூஜைகளை நாகராஜ், சோமு குருக்கள் செய்தனர். புக்குளம் கைலாசநாதர் கோவிலில் நடந்த மகாசிவராத்திரி விழாவில் சிறப்பு அபிஷேகமும், மகா தீபாராதனை செய்து பூஜைகள் நடத்தப்பட்டது. முடியனூர் அருணாச்சலேஸ் வரர் கோவில், குடியநல்லூர் கைலாசநாதர் கோவில், வீரசோழபுரம் அர்த்தநாரீஸ்வரர் கோவில்களில் நடந்த பூஜையில் பக்தர்கள் வழிபாடு நடத்தினர்.