பதிவு செய்த நாள்
24
பிப்
2015
12:02
திருத்தணி: விநாயகர் கோவில் கும்பாபிஷேக விழாவில், திரளான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபட்டனர். திருத்தணி ஒன்றியம், கன்னிகாபுரம் கிராமத்தில், புதிதாக, ஐந்து லட்சம் ரூபாய் மதிப்பீட்டில், விநாயகர் கோவில் கட்டப்பட்டது. இக்கோவிலின் மகா கும்பாபிஷேக விழா, நேற்று முன்தினம், காலை 9:00 மணிக்கு, கணபதி ஹோமத்துடன் துவங்கியது. இதற்காக கோவில் வளாகத்தில், மூன்று யாக சாலைகள், 108 கலசங்கள் வைத்து, யாக பூஜைகள் நடந்தன. நேற்று, அதிகாலை 5:00 மணிக்கு, மூன்றாம் கால யாக பூஜை நடந்தது. காலை 6:00 மணிக்கு, கலச ஊர்வலம் புறப்பாடும், காலை 7:00 மணிக்கு, புதிதாக அமைக்கப்பட்ட கோவில் விமானத்தின் மீது கலசநீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது. தொடர்ந்து, காலை 10:00 மணிக்கு, மூலவர் விநாயகருக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் மற்றும் தீபாராதனை நடந்தது. இரவு 7:00 மணிக்கு, உற்சவர் வீதியுலா நடந்தது. தொடர்ந்து, இரவு 8:00 மணிக்கு, சகஸ்ர நாம பஜனை நடந்தது.