பதிவு செய்த நாள்
24
பிப்
2015
12:02
பாலக்காடு: செம்பை சங்கீத உற்சவம், பிப்., 27ம் தேதி துவங்கி, மார்ச் 1ம் தேதி வரை, பாலக்காடு அருகே, கோட்டாயி பார்த்தசாரதி கோவிலில் நடக்கிறது. முதல் நாள் மாலை, 5:00 மணிக்கு, கேரள முன்னாள் கல்வியமைச்சர் பேபி துவங்கி வைக்கிறார். தரூர் எம்.எல்.ஏ., பாலன் தலைமையில் நடக்கும் விழாவில், மகாராஷ்டிரா முன்னாள் கவர்னர் சங்கரநாராயணன் பங்கேற்கிறார். மறுநாள் காலை, 9:30 மணிக்கு, இளம் கலைஞர்களின் சங்கீதார்ச்சனை, மதியம் பரத நாட்டியம், மாலை இசை நிகழ்ச்சிகள் நடக்கின்றன. வரும், மார்ச் 1ல், மண்ணூர் ராஜகுமாரனுண்ணி, சதனம் ஹரிகுமார், வெள்ளிநேழி சுப்ரமணியன் தலைமையில் கலைஞர்கள் பஞ்சரத்ன கீர்த்தனை இசைக்கின்றனர். மாதங்கி ருத்ரகுமார், அகேலா வி பிரசாத், மஞ்சு ஜயவிஜயன், சித்தூர் வேணுகோபால் மற்றும் செம்பை வித்யா பீட ஆசிரியர்கள், மாணவர்களின் இசைச்சேரி நடக்கிறது. அன்று மாலை, 5:00 மணிக்கு புவனா ராமசுப்பு, 6:30 மணிக்கு விஜய் ஜேசுதாஸ், இரவு, 7:30 மணிக்கு டி.வி.கோபாலகிருஷ்ணன், 8:30 மணிக்கு ஜேசுதாஸ், 10:45 மணிக்கு ஜெயன் கச்சேரியுடன், சங்கீத உற்சவம் நிறைவடைகிறது. ஏற்பாடுகளை, பொறுப்பாளர் செம்பை ஸ்ரீனிவாசன், நிர்வாகிகள் செம்பை சுரேஷ், பிரகாஷ் உள்ளிட்ட, செம்பை குடும்பத்தினரும் கோவில் நிர்வாகத்தினரும் மேற்கொண்டுள்ளனர்.