மாரியம்மன் கோயில் கொடியேற்றம்: கம்பத்திற்கு பூவோடு வைக்கும் விழா!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
25பிப் 2015 12:02
பழநி: பழநி மாரியம்மன்கோயில் மாசித் திருவிழா கொடியேற்றம் நடந்தது. திருக்கம்பத்திற்கு பூவோடு வைக்கும் விழா நடந்தது. பழநிகோயில் நிர்வாகத்திற்குட்பட்ட மாரியம்மன்கோயில் மாசிதிருவிழா பிப்.,13ல் துவங்கியது. இதில் திருக்கம்பம் அலங்கரிக்கப்பட்டு அதில் புனிதநீர், பால் ஊற்றி பக்தர்கள் வழிபடுகின்றனர். நேற்றிரவு 8.20மணிக்கு மாரியம்மன் சன்னதியில் கொடியேற்றம் நடந்தது. கம்பத்தில் பூவோடுவைத்து பக்தர்கள் நேர்த்திகடன் செலுத்தினர். இரவு 9மணிக்குமேல் தங்கமயில் வாகனத்தில் அம்மன் திருவீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இன்று (பிப்.,25) அடிவாரம் அழகுநாச்சியம்மனுக்கு காலை 9மணிக்கு மேல் திருக்கல்யாணமும் அதைதொடர்ந்து அம்மன் புதுச்சேரி சப்பரத்தில் உலா வருதல் நடக்கிறது. மாரியம்மன் கோயிலில் மார்ச் 3ல் திருக்கல்யாணம், மார்ச் 4ல் தேரோட்டம் நடக்கிறது. விழா நாட்களில் மாரியம்மன் தங்ககுதிரை, வெள்ளியானை, ரிஷபம் உள்ளிட்ட வாகனங்களில் உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலிக்கிறார்.