திருநெல்வேலி : நெல்லை டவுன் பழனித் தெரு முப்பிடாதிஅம்மன் கோயிலில் மண்டல பூஜைகள் துவங்கியது. நெல்லை டவுன் பழனித் தெருவில் முப்பிடாதிஅம்மன் கோயிலில் கும்பாபிஷேகத்தை தொடர்ந்து மண்டல பூஜைகள் துவங்கியுள்ளது. பக்தியும், பண்பாடும் வளம்பெற துணைபுரிவது பெண்களே, ஆண்களே என்ற தலைப்பில் பட்டிமன்றம் நடந்தது. நடுவராக பாமணி, பெண்களே என்ற அணியில் சங்கீதா, சொர்ணா, ஆண்களே என்ற அணியில் கவிஞர் ஜெயபாலன், பொருநை பாலு வாதிட்டனர். ஸ்ரீராம் லைப் இன்சூரன்ஸ் கம்பெனி வணிக வளர்ச்சி மேலாளர் பிரஷ்நேவ், சங்கரன் வாழ்த்துரை வழங்கினர். காசி ஜூவல்லர்ஸ் நிறுவனத்தினர் நிகழ்ச்சியை உபயமாக வழங்கினர். கமிட்டி செயலாளர் ராதாகிருஷ்ணன் சொற்பொழிவாளர்களை கவுரவித்தார்.